மக்கள் பாதுகாப்பு வலயம்" பகுதியில் இன்று படையினரின் எரிகுண்டு தாக்குதலில் 26 தமிழர்கள் உடல் கருகி பலி: 52 பேருக்கு எரிகாயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்றைய தாக்குதல்களில்  எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தோர் எல்லோருமே கடுமையான எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மூங்கிலாறு
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம்
 முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 7 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
தேராவில்
முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினரின் இந்த தாக்குதல்களினால் மக்களின் பெருமளவிலான வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள் என்பன முற்றாக அழிவடைந்தும், சேதமடைந்தும் உள்ளன.

சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குத் தப்புவதற்காக மக்கள் பெரும் அவலப்பட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து ஓடுகின்ற சூழ்நிலையிலேயே, அவர்கள் மீது இவ்வாறான படுகொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
 
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009
வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் என குறிப்பிட்டு வவுனியா வைத்தியசாலையின் நுழைவாயில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் 167 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அன்றைய தினம் 226 நோயாளர்களும், 139 உறவினர்களான உதவியாளர்களும் அந்தச் சங்கத்தினரால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் வவுனியா பொது வைத்தியசாலை பொது மக்களுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தலின் மூலம் 167 பேரே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட 226 பேரில் மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. நோயாளர்களுடன் உதவிக்காக வந்த உறவினர்களான 139 பேரும் வவுனியா நெளுக்குளம் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 167 பேரின் விபரங்கள் வருமாறு:

விமலாதேவி (வயது46 )புதுக்குடியிருப்பு,வி.விந்துஷா (வயது28 )புதுக்குடியிருப்பு,சேஷனா (வயது03 ),எஸ். செல்வரஞ்சினி (வயது23) கிளிநொச்சி,என். பவளமணி (வயது52) விசுவமடு,ஜே. சரஸ்வதி (வயது47 )திருவையாறு,ஜே. சத்தியபாமா (வயது29 )அம்பாள்புரம் கிளிநொச்சி,எஸ். தர்சிகா (வயது15) தர்மபுரம்,எஸ். சரஸ்வதி (வயது63) சுதந்திரபுரம்,கே. கஜேந்தினி (வயது16) சுதந்திரபுரம்

ஆர். மகேஸ்வரி (வயது37) தேவிபுரம் ,பி. ஜெனிஸ் (வயது29) முள்ளியவளை,ஆர். நகுலன் (வயது33) விசுவமடு,கே. யோகலிங்கம் (வயது42) சுதந்திரபுரம்,சேனாதிராஜா (வயது62 )அனந்தர்புளியங்குளம் நெடுங்கேணி,எஸ். பேரின்பகரன் (வயது33 )பளை,பி. சஜீவன் (வயது16),திருநகர்,எஸ். கபிலன் (வயது17 )நட்டாங்கண்டல்,கே. இரட்னநாயகம் (வயது59 )உடையார்கட்டு,கே. வினோதன் (வயது34) மூங்கிலாறு.

எஸ். கிருஸ்ணகுமார் (வயது44) கோணாவில்,எம். இராஜேந்திரன் (வயது38) முரசுமோட்டை,ஆர். கதிர்காமநாதன் (வயது32) விசுவமடு,ஆர். குகதாசன் (வயது33) நல்லூர் பூனகரி,வை. யோகேஸ்வரன் (வயது30) கிழவிகுளம் பாலமோட்டை,எம். நாகராஜா (வயது45 )ஜெயபுரம்,அந்தோனி (வயது60),எஸ். செல்வரூபன் 28ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். சுகந்தன் (வயது29) சுதந்திரபுரம் ,எம். ரவிச்செல்வன் (வயது32) சுதந்திரபுரம் ,எஸ். விக்கினராஜா (வயது52 )சுவிச்செந்தல், வட்டக்கச்சி.

இராமநாதன் பஞ்சலிங்கம் (வயது43) விசுவமடு,கே. நடராசா (வயது69) திருவையாறு,ரி. கிஷாந்த் (வயது12 )திருவையாறு,எம். செல்வராஜா (வயது50) முள்ளிக்குளம், மடு,வை. காண்டீபன் (வயது16) உடையார்கட்டு ,கே. ஜீவன் (வயது28) நெடுங்கேணி,ஆர். பார்த்திபன் (வயது14 )கற்சிலைமடு, பேராறு,எம். உதயபாலா 40 உடையார்கட்டு,கே. கனகலிங்கம் (வயது54) ஒலுமடு,எஸ். உதயசூரியன் (வயது42) கணேசபுரம், கிளிநொச்சி,பி. பிரவானந்தம் (வயது30) நெடுங்கேணி,ஆர். நிஷாந்தினி (வயது22) உடையார்கட்டு.

சிவகௌரி (வயது38) விசுவமடு,சுலக்ஷன் (வயது04) முள்ளியவளை,எம். அந்தோனியம்மா (வயது64 )கல்மடு,ஏ. வினிதா (வயது33 )கண்டாவளை,வை.வசந்தராணி (வயது42) விநாயகபுரம் கிளிநொச்சி,ஆர். பிரதீபா (வயது28 )வள்ளிபுனம்,ஆர். மதிவாணி (வயது08) ,தந்திரபுரம் ,ஜே. ஜெனிற்றா (வயது14) சுழிபுரம் யாழ்ப்பாணம்,கே. மதுஷா (வயது14 )கற்சிலைமடு ஒட்டுசுட்டான்,எல். ரதீஸ்வரி(வயது 24), 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஏ. மகேஸ்வரி (வயது18) தர்மபுரம் உழவனூர்,எம். அன்பரசன் (வயது07) வேலணை மேற்கு,எம். அகமதி (வயது11 )வேலணை மேற்கு,எம். சாந்தலட்சுமி (வயது39 )வேலணை மேற்கு.

பழனியம்மா (வயது50) 2ம் கட்டை திருநகர்,எம். பூபதியம்மா (வயது75) வள்ளிபுனம் ,என். நிரோஷா (வயது16 )வள்ளிபுனம்,ஏ. சீதா (வயது29 முழங்காவில்,எஸ். டிலக்ஷன் (வயது12) சுதந்திரபுரம் ,கே. யோகலிங்கம் (வயது44 )புதுக்குடியிருப்பு ,எஸ். குகாகரன் (வயது13 )புதுகுடியிருப்பு, (அனுராதபுரம் வைத்தியசாலை),ஜீ. ஞானசிறி (வயது28 )மூங்கிலாறு,ஏ. சில்வஸ்டர் (வயது33) ,இமானுவேல் ஆனந்தராஜ் (வயது48 )சுதந்திரபுரம் ,ஜோசப் லியோன் (வயது17) அம்பாள்குளம்,பி. மகேஸ்வரன் (வயது32 )புதுக்குடியிருப்பு,எம். ரவிசங்கர் (வயது14) வவுனிக்குளம் ,எஸ். ரிஷாலினி (வயது19 )சுதந்திரபுரம் ,ஐ. ஜெயராஜா (வயது42) வட்டக்கண்டல்.

எம். சைதனியா (வயது17) வட்டக்கச்சி,ஆர். துஷாந்தினி (வயது27 )முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். ஆன் டிலக்ஷி (வயது11) வள்ளிபுனம்,எம். மதியழகன் (வயது07) முரசுமோட்டை,கே. திருமகள் (வயது32) முறிகண்டி,இ. கோவிந்தராஜன் (வயது30) குமுழமுனை,ஆர். மதிவண்ணன் (வயது12 )சாந்திபுரம் ,ஐ. சசிகரன் (வயது18 )வட்டக்கச்சி,பி. லனோஜன் (04 மாதம்) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ப. தனுஷா (வயது35) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,பி. அருந்ததி (வயது42) முள்ளிவாய்க்கால்,என். பாலேஸ்வரன் (வயது31) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். அன்னலட்சுமி (வயது25) பிள்ளையார் கோவிலடி உடையார்கட்டு,டி. வினோசிகா (வயது15) சுதந்திரபுரம் உடையார்கட்டு.

நவரத்தினம் விஜயரூபன் (வயது40 )தேவிபுரம்,எம். அமிர்தவள்ளி (வயது61), எம் கோபாலகிருஷ்ணன் (வயது46 )வவுனியா,கே. சனுஜா (வயது06 )சுதந்திரபுரம் ,என். ஆனந்தன் (வயது38 )சன்னாசிபரந்தன் ,எம். கிருஷ்ணன் (வயது05) வற்றாப்பளை,எம். கீர்த்தனன் (வயது13 )வற்றாப்பளை,எம். ஜெகதாம்பாள் (வயது31 )கிருஷ்ணபுரம் கிளிநொச்சி,பி. ரம்மியா (வயது17 )திருநகர்,எஸ். பிரதீபன் (வயது26) கண்ணகிபுரம் விசுவமடு,எஸ். மயூரன் (வயது15) மருதநகர்,எஸ். அபிநயா (1 1/2 வயது) வள்ளிபுனம் ,எஸ். செரான் 3 மாதம் மூங்கிலாறு,எம். மங்கலராஜா 35 ஜெயபுரம் ,எஸ். ராஜேஸ்வரி (வயது50 )சுதந்திரபுரம் ,எம். யதுஷா (வயது06) கிளிநொச்சி,ஆர். செல்வராஜா 33 மல்லாவி.

கே. கவிதாஸன் (வயது30 )புதுக்குடியிருப்பு,எஸ். ஜெயாநந்தன் (வயது27) 5ம் யுனிட் இராமநாதபுரம்,ஏ. ரகுவரன்(வயது 29) வற்றாப்பளை,பி. ரதி (வயது42) புதுக்குடியிருப்பு,டி. செபஸ்தியான்பிள்ளை (வயது51 )உடையார்கட்டு,எம். மகிழினி (வயது13) மருதங்கேணி தாளையடி,பி. மயூரிஷா (வயது09 )மருதங்கேணி தாளையடி,கே. யோகலிங்கம்(வயது 44 )புதுக்குடியிருப்பு,கே. அன்புராஜா (வயது61 )நெளுக்குளம் முகாம்,கே. குணசீலன் (வயது30 )நெளுக்குளம் முகாம்,வீ. விந்துஜன் (வயது04 )நெளுக்குளம் முகாம் ,சீ. கோமதி (வயது33 )பல்லவராயன்கட்டு,சீ. கிருஷா (வயது08 )பல்லவராயன் கட்டு கே. சோமசுந்தரம் (வயது83 )1ம் யுனிட் முரசுமோட்டை,ஏ. பிரன்சி (வயது28) நெத்தலியாறு,எம். ஸ்தேவாம் (வயது22) ஹட்சன் ரோட் வட்டக்கட்சி,எஸ். கமலாதேவி (வயது65) கனகபுரம் கிளிநொச்சி,பி. புஸ்பராணி(வயது 61) செட்டியார் தெரு பருத்தித்துறை,கே. சரோஜினிதேவி (வயது33) 3 வட்டாரம் முரசுமோட்டை,எஸ். சர்வானந்தன் (வயது26 )உருத்திரபுரம்,எஸ். அந்திரேஸ் (வயது60 )ராமநாதபுரம்,வி. காசிநாதன் (வயது34) கண்டாவளை,எஸ். குமுதினி (வயது11) லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை.

எஸ். சிந்துஜன் (வயது08 )லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை,எஸ். ஜிந்துஜன் (வயது06 )லோட்டஸ் ரோட் வண்ணாரபண்ணை,ப. தினேஷ்ரூபன் (வயது24) பள்ளிக்குடா பூனகரி,அல்வின் அனுரா (வயது29 )ஐயனார்கோவிலடி முரசுமோட்டை,பெரியசாமி இளநிதா (வயது10 )மாணிக்கபுரம் விசுவமடு,எஸ். ரவீந்திரன் சுதந்திரபுரம் விசுவமடு,கண்ணகியம்மா (வயது60 ரெட்பானா),எஸ். சுபாஜினி (வயது30) கணுக்கேணி,சண்முகரட்ணம் உதயகுமார் (வயது27) முரசுமோட்டை.

என். வினோத் (வயது16) விசுவமடு,பி. யோகலிங்கம் (வயது55) ராமநாதபுரம் ,கே. மாணிக்கம் (வயது32) தேவிபுரம் ,ரீ. தங்கராசா (வயது37) ரெட்பானா,ரீ. கணேஷ் (வயது10) ரெட்பானா,எஸ். தினோஜா (வயது13) உடையார்கட்டு,பி. யசோதாதேவி (வயது40) வள்ளிபுனம்,பி. கிருஜா (வயது20) திருநகர்,எஸ. கணேசமூர்த்தி (வயது49 )ராமநாதபுரம் ,எம். சுரேஷ் (வயது24 )முள்ளிவாய்க்கால்,எஸ். லக்சனா (வயது13 )கனகராயன்குளம் ,ஜே. மகேந்திரன் (வயது55 )புதுக்குடியிருப்பு,வை. விதுஷன் (வயது08) சுதந்திரபுரம் ,வை. தேன்மொழி (வயது50) ராமநாதபுரம்.

பி. யோகேந்திரன் (வயது25 )திருநகர்,ஏ. விஜயபாலகிருஷ்ணன் (வயது39 )யோகபுரம் மல்லாவி,ரீ. சுவர்ணன் (வயது25) முள்ளிவாய்க்கால்,வி. செல்லத்துரை (வயது70) கனகராயன்குளம்,எஸ். சிவதாசன் (வயது16) சுதந்திரபுரம்,எஸ். கந்தையா (வயது79) 4 ஆம் கட்டை பேராறு,கே. நாகமணி (வயது83 )புதுக்குடியிருப்பு,தம்பிப்பிள்ளை ராசரட்ணம் (வயது73) திருநகர் ,எஸ். கிருஷ்ணாதேவி (வயது57) வட்டக்கச்சி,ஜே. ஜெயராணி (வயது45) நெளுக்குளம் முகாம் ,எஸ். அகல்விழி (1 1/2 மாதக்குழந்தை) முதலாம் வட்டாரம் முள்ளியவளை,எஸ். சர்மிகா (வயது3) 1ம் வட்டாரம் முள்ளியவளை.

மேரி சதுர்ஷி (6 மாதம்) இரணைப்பாலை புதுக்குடியிருப்பு,ரீ. விதுஷன் (வயது4) வள்ளிபுனம்,எஸ். சுமிதா (வயது2) நெளுக்குளம் முகாம் ,ஆர். வித்தியா (வயது27) 2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஜீ. தனலட்சுமி (வயது29) இரணைப்பாளை,சிவாஜினி (10 நாள் )வள்ளிபுனம் ,ஆர். பாக்கியராஜா (வயது55) இலுப்பைக்கடவை.

உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009
தற்காலிகமாக இயங்கும் உடையார்கட்டு மருத்துவமனை (கிளிநொச்சி மருத்துவமனை) மீது நேற்று திங்கட்கிழமை  படையினர் செலுத்திய 3 எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததினால் மருத்துவமனை தாதி ஒருவர் பலியானார். மேலும் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
எதுவித உதவிகளுமின்றி  அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் புதுக்குடியிருப்பு ,  உடையார்கட்டு ஆகிய இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணைத் தாக்குதல் அடுத்தடுத்து நடத்தியுள்ளனர்.
உடையார்கட்டு வைத்தியசாலை மீது நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரான தவராசா கஜேந்தினி அந்த இடத்தில் துடிதுடித்து மரணமானார். மற்றும் இருவர் ஆஸ்பத்திரிக்குள் பலியாகினர்.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் மூன்று ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இரண்டாவது ஷெல் வெடித்ததில் தாதிய உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். அங்கு நோயாளர்களுக்கு அவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்  காரணமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை 84 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009
"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில்  இன்று செவ்வாய் மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது

50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்றைய இந்த தாக்குதலில் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் 55 பேரினது உடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது இன்று காலை 8:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எரிக்கும் குண்டுகள்

இதேவேளை, சிறிலங்கா படையினர் தற்போது ஏவும் பீரங்கி எறிகணைகள் யாவுமே வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் தன்மையுடையதாக  கூறப்படுகிறது

மனித உடல்களோ, மரங்களோ, கட்டடங்களோ, வாகனங்களோ எதுவாயிருந்தாலும் பற்றி எரிகின்றது. இதனால், அண்மைக்காலங்களில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றவர்கள் எல்லோருமே  உடல் கருகி உயிரிழப்பதுடன், காயமடைகின்றவர்களும் மிகக் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகின்றனர்

சிறிலங்கா படைகள் ஏவும் இந்த எறிகணைகள், எல்லாவற்றையும் எரித்துக் கருக்கும் தன்மை உடையவையாக இருப்பினும்  இந்த எறிகணைகள் சரியாக எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வன்னியில் நேற்றும் (புதன்கிழமை) சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் 13 தமிழர் பலி; 36 பேர் காயம்
 
[ வியாழக்கிழமை, 05 பெப்ரவரி 2009
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய எறிகணை தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் தொடர்ந்து வந்து குவிவதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினரின் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நான்காவது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.

மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் என்பன எறிகணைத் தாக்குதல்களில் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்திய பின்னரும் சிறிலங்கா படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
300 மீற்றர் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பின்னரும் மருத்துவமனை மீது தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தாக்குதல்களின் போது, ஏற்கனவே சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அ.வசந்தகுமார் (வயது 26) மற்றும் ப.மதன்ராஜ் (வயது 19) ஆகிய இருவருமே  படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது வீழ்ந்த சிறிலங்கா படையின் பீரங்கி குண்டிலேயே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலச்செல்வன் கஸ்தூரி (வயது 26) நேற்றைய தாக்குதலின் போது அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

அதேநிலையில் வன்னியில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினரின்  இந்த எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5:00 மணி வரையிலும் காயமடைந்த 44 பொதுமக்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏராளமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 
அதில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும், அந்த குழந்தையின் தாய் முன்னரே எறிகணை வீச்சில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டார். அவரது மற்றுமொரு குழந்தையும் ஏற்கெனவே பீரங்கி தாக்குதலில் இறந்து விட்டது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது 4 சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.

சா.சுதாஸ் (வயது 05)
பாலசேகரம் கஜேந்திரன் (வயது 10)
பாலசேகரம் கஜானா (வயது 13)
செல்வநாயகம் கிளி (வயது 31)
சின்னப்பு இராசமலர் (வயது 56)
சின்னப்பு கெங்காதரன் (வயது 45)
பொ.ஜீவமலர் (வயது 53)
ஆகியோரே படுகொலை செய்யப்பட்டோர் ஆவர்.

கொல்லப்பட்ட மேலும் மூவரின் உடலம் சிதறிக் கிடப்பதினாலும், அவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாய் இருப்பதனாலும் அவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக பெறமுடியவில்லை. அத்துடன்

மதன் மபிசன் (வயது 04)
தமிழ்மாறன் சர்மிகா (வயது 09)
கெங்காதரன் பாலதரணி (வயது 06)
கெங்காதரன் தர்மேஸ் (வயது 08)
சிவநேசன் (வயது 30)
த.சாந்தநேசன் (வயது 37)
கோ.மகேந்திரம் (வயது 47)
மகேந்திரம் இராசமலர் (வயது 47)
சௌந்தரராசா சறோஜினிதேவி (வயது 45)
அன்ரன் மேரிமலர் (வயது 30)
புஸ்பராசா ரேணுகாதேவி (வயது 28)
செல்வராசா புஸ்பராஜா (வயது 30)
தினகரன் சின்னத்தம்பி (வயது 55)
வல்லிபுரம் கோமதி (வயது 30)
தமிழ்மாறன் மேனகா (வயது 29)
தர்மராசா வாகீசன் (வயது 23)
யோசப் டில்லிமலர் (வயது 63)
செபமாலை விக்ரர் (வயது 72)
சின்னத்துரை தனராசா (வயது 50)
தனராசா புஸ்பராணி (வயது 45)     ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்னியில் தமிழர் படுகொலை தொடர்கின்றது: இன்றும் (வெள்ளிக்கிழமை) 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்
 
[ வெள்ளிக்கிழமை, 06 பெப்ரவரி 2009
வன்னியில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 174 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தளன்

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் ஆட்லறி பீரங்கித் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம்
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று நண்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவர்களான சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களின் குடிசைகள் மீது இன்று முழு நாளும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் 100 வீட்டுத்திட்டம் மீது இன்று பிற்பகல் 4:35 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதலில் 6 தமிழர்களை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடையார்கட்டு
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வள்ளிபுனம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் ஆகிய மூன்று இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் மட்டும் மொத்தமாக 64 பேர் காயமடைந்துள்ளனர்.

பொன்னம்பலம் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 61 நோயாளர் பலி; 12 பேர் படுகாயம்
 
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2009
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது நடைபெற்ற வான் தாக்குதலின் தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளை சரிவரச் செய்ய முடியாது இருக்கின்றது.

ஆரம்பகட்ட தகவலின்படி 40 நோயாளர் கொண்ட விடுதியில் இருந்த நோயாளர்களும் ஏனையோருமாக 61 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

இவ் வைத்தியசாலை 1996 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயங்கி வருவதாகவும் அரசசார்பற்ற நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி பகுதிகளில் இன்றும் (சனி) படையினர் ஆட்லறி கொத்துக் குண்டு தாக்குதல்: 65 தமிழர்கள் பலி; 226 பேர் காயம்
 
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2009
வன்னியின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும்  சிறிலங்கா படையினர் ஆட்லெறி பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். இத்தாக்குதல்களில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 226 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஆட்லெறி பீரங்கியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற போது அவற்றுக்குள்ளிருந்து சிறிய குண்டுகள் 50 மீற்றருக்கும் கூடுதலான விட்டப் பகுதிக்கு பறந்து சென்று குறித்த நேரத்தில் வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

தேவிபுரம்

முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் இன்று சனிக்கிழமை, சிறிலங்கா படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், ஈருளிகளிலும், உந்துருகளிலும் மற்றும் ஊர்திகளிலும் மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது அவர்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:20  மணியளவில் சிறிலங்கா வான்படையின் "எஃப்-07" வானூர்திகள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பயணித்துக் கொண்டிருந்த 6 ஈருளிகள், 4 உந்துருளிகள் என்பன முற்றாக அழிவடைந்துள்ளன.

அப்பகுதி மீது தொடர்ந்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்துவதால் படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு சிகிச்சை வழங்க முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன என தெரிவிக்கின்றனர்.
இதே பகுதியை இலக்குவைத்து மீண்டும் பிற்பகல் 3:20 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பொதுமக்களின் 2 உழுஊர்திகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதேவேளை தேவிபுரத்தில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 17 ஆல் உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 54 ஆல் உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன்படி அங்கு கொல்லப்பட்ட தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, முல்லைத்தீவு இரணைப்பாலை, ஆனந்தபுரம், கைவேலி ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதனால் தற்போது வீதியோரங்களிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் கடந்த 48 மணி நேரத்தில் வான், எறிகணை தாக்குதல்களில் 180 பொதுமக்கள் வரை பலியாகினர்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009
இலங்கை இராணுவத்தினரால் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 48 மணித்தியாலங்களுக்குள் சுதந்திரபுரம், இருட்டுமடு, உடையார்கட்டு மற்றும் தேவிபுரம் ஆகிய பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் படையினர் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களில் மாத்திரம் 120 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாத்திரம் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன்  நேற்று சனிக்கிழமை மாத்திரம் 62க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்
இதேவேளை வெள்ளிக்கிழமை இலங்கை விமானப்படை புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டு தாக்குதல்களில் 61 நோயாளர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்களின் சேத விபரங்கள் தெரியவரவில்லை.
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தனுக்கு பொதுமக்கள் நடமாடும் பாதைகளில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான செல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் உயிரிழந்த 8 உடலங்கள் சனிக்கிழமை காலை வீதியோரங்களில் காணக்கூடியதாக இருந்தது. இதில் பேரூந்து ஒன்று கைவிடப்பட்ட நிலையில் எறிகணை வீச்சில் சேதமடைந்தது.  2  உழவூர்திகள்  தீக்கிரையாகின.
புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு வீதியான வாகீசன் வீதியிலும் 4 உடலங்கள் மீட்கப்பட்டன.
இதேவேளை பாதுகாப்பு வலயத்தில் உள்ள தேவிபுரம் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.45க்கு பின்னர்  மேற்கொள்ளப்பட்ட, கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் 9 பேர்  பலியாகினர்.
 அத்துடன் சுதந்திரபுரம் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்களில் அந்த வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் பலியானார்.

வன்னியில் சிறிலங்காவின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு தொடர்கிறது; இன்று (ஞாயிறு) மட்டும் 80 அப்பாவிகள் பலி, 200 பேர் காயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை  80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200  பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இரண்டு மைல் நீள தூரத்துக்கு, மிக நெருக்கமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட்டு நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர ஊர்திகளிலும் மற்றும் நடந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த வேளையில் மக்களை வேண்டும் என்றே இலக்கு வைத்து வெறித்தனமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என பெருமளவு தமிழர்கள் உடல் சிதறிக் கொல்லப்பட, மேலும் பெருமளவிலானோர் படுகாயமடைந்து வீழ்ந்த பெரும் அவலம் அங்கு நிலவியது.
வள்ளிபுனம் பகுதியில் பதுங்குகுழிக்குள் 3 பேர் பலியாகியும் 4 பேர் காயமுற்றிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் 40 பேர் சிறுவர்களும், பெண்களும் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்களையோ, அல்லது காயமடைந்து வீழ்ந்தோரையோ மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினர் தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்களை நடத்தி வந்தனர் எனவும், இதனால் காயமடைந்தோரை மீட்க முற்பட்டவர்களும் காயங்களுக்கு உள்ளாகி வீழ்ந்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற்கல் 3:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்து 7 மணித்தியாலங்களின்  பின்பு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டபோது, காயமடைந்த பலர் குருதிப்போக்கினால் இறந்து போயிருந்தனர். இறந்தவர்கள் போக, காயமடைந்த நிலையில் 200 பேர் மீட்கப்பட்டனர்.

காயமடைந்தோர் பலர் மீட்கப்பட்ட போதும் தற்போது மருத்துவமனைகள் எதுவும் வன்னியில் இல்லாத நிலையில் மரங்களின் கீழும், கொட்டகைகளின் கீழம், வெறும் பாய்களின் மீது வைத்தே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இருந்தாலும் மீட்புப் பணிகளை முழுமையாக செய்யப்பட முடியாத அளவுக்கு வன்னியில் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்துப் பாதையான பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மீட்புப்பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ஊர்திகள் பலவற்றின் மேல் பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால், அவற்றில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக, ஒட்டுமொத்தமாக, அழிக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிதறிய உடலங்களும், இரத்தச் சிதறல்களும், சிதறிய உடமைகளும், தீர்ப்பற்றி எரிந்து கொண்டிக்கும் ஊர்திகளுமாக, அந்த இடம் பெரும் அவலம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500 குடிசை வீடுகளும் முற்றாக அழிவடைந்தன.

வன்னியில் திங்களன்று 36 தமிழர்கள் படுகொலை; 76 பேருக்கு படுகாயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009
வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் நேற்றும் சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36  தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76  பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர்  அடக்கம் செய்துள்ளனர்.
சுதந்திரபுரம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கி.மனோன்மணி (வயது 60)
ந.ஜெயசாந்தி (வயது 38)
மு.அங்கமுத்து (வயது 58)
ஆகியோர் கொல்லப்படடவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு வயது குழந்தையான சுசீலா
யோ.கவிந்தவி (வயது 09)
யோ.விதுஸ்ணவி (வயது 13)
ந.டயோலா (வயது 15)
த.யோகா (வயது 19)
கி.இராசமணி (வயது 65)
இ.இராஜேஸ்வரி (வயது 39)
பொ.கிருஸ்ணமூர்த்தி (வயது 32)
மா.சாந்தகுமார் (வயது 25)
விஜயலட்சுமி (வயது 46)
க.மல்லிகாதேவி (வயது 48)
இராஜசிறீ (வயது 28)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தளன் பகுதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இத்தாக்குதலின் போது ஒரு கொட்டகைக்குள் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகள் செயலிழந்து விட்ட காரணத்தினால் மரங்களின் கீழும் தெருவோர காப்பகழிகளிலுமே காயமடைந்தோருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
நிவாதேயினி (வயது 10)
த.தமிழன்பன் (வயது 05)
த.செல்வானந்த் (வயது 12)
செ.தனஞ்சியன் (வயது 47)
த.நகுலேஸ்வரி (வயது 42)
செ.தயாபரன் (வயது 37)
த.சுமதி
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா வான்படை தாக்குதல்
இதேவேளை, சிறிலங்கா வன்படை நேற்று நடத்திய குண்டுத்தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கொட்டகைகளை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்தோரில்
சடையன் வரதராசா (வயது 23)
கணேசன் சுதாகரன் (வயது 25)
இராமன் இராசன் (வயது 32)
தயாபரன் பாலசுமதி (வயது 35)
சிவநேசன் (வயது 36)
ஆகியோரினது விபரங்கள் கிடைத்துள்ளன.
நல்லடக்கம்
இதேவேளை, சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 தமிழர்களின் உடலங்கள் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 12 உடலங்கள் உரிய உறவினர்கள் எவரும் இல்லாத நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

படையினரின் புதிய வகைப் படுகொலை: இன்று 17 பேர் சுட்டுக்கொலை
 
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009
நேற்று தற்கொலைத் தாக்குதல் எனப் புதிய கதையொன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, தப்பிவரும் மக்கள் மீது தமது வன்முறைக்கு வழிதேடிக்கொண்டுள்ள சிறீலங்காப் படையினர், இன்று நடத்திய தாக்குதலில் 17 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அகோர எறிகணை மற்றும் வான் தாக்குதலில் இருந்து தப்பி இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் மீது படையினர் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர். இதன்போது கொல்லப்பட்ட இரு குழந்தைகள் உட்பட 17 பேரது உடலங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள படைதரப்பு, 69 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அத்துடன், தற்போது படையினர் வசம் அகப்படுபவர்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். ஹிட்லிரின் இன அழிப்புக் காலத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் இவ்வாறே தரம் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு விதங்களில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

வன்னியில் படையினர் இரவு நேர பீரங்கித் தாக்குதல்: இன்று (செவ்வாய்) மட்டும் 22 தமிழர்கள் படுகொலை; 87 பேருக்கு காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் போதிய மருத்துவ வசதிகள் இன்றி பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தேவிபுரம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:15 மணி  தொடக்கம் 3:15 மணி வரையான ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் சிறிலங்கா படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர்.
இதன் போது 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதன் போது 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களினால் காயமடைகின்ற மக்கள், மருத்துவமனைகளும், போதியளவு மருத்துவ சிகிச்சைகளும் இல்லாத நிலையில் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நேற்று (புதன்) 34 பொதுமக்கள் படுகொலை; 46 பேர் காயம்: மருத்துவமனை மீதும் தாக்குதல்
 
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009
முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால் காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும் காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டன.

மருத்துவமனை மீது தாக்குதல்

இதேவேளை, தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1:00 முதல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  அப்பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால்  மருத்துவமனையில்  இருக்கும் நோயாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் - [எச்சரிக்கை: இதய பலவீனமானவர்களும் குழந்தைகளும் இதை தவிர்க்கவும்]
 
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009
கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள்.
ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ,  தஞ்சை வெண்மணியில் நிகழ்ந்ததை விட கொடூரமான இனப்படுகொலைகளை பயங்கரவாத சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகளே ஆதாரங்கள்.

 

blogger templates | Make Money Online