வன்னியில் தினமும் சராசரி 40 பொதுமக்கள் பலியாவதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்: வைத்தியர் வரதராசா
 
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009
வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கடும் மோதல்களினால்  தினமும் சராசரியாக  40  பொதுமக்கள் பலியாவதுடன், 100க்கும் அதிகமானவர்கள் கயாங்களுக்கு உள்ளாவதாக பிரதேசத்தின் உயர் மருத்துவ அதிகாரி மருத்துவர் வரதராசா தெரிவித்துள்ளார்.
 
மோதல்கள் இடம்பெற்று வரும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினாலேயே பொதுமக்கள் காயமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் அதிகமான பொதுமக்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் வலியுறுத்தி வருகின்ற போதிலும், தினந்தோறும் பொதுமக்கள் பாதிக்கும் வீதம் உயர்வடைந்து செல்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதியளவு மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் வைத்தியர் வரதராசா குறிப்பிட்டுள்ளார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online