10 பெப்ரவரி 2009 வன்னியில் திங்களன்று 36 தமிழர்கள் படுகொலை; 76 பேருக்கு படுகாயம்
at சனி, ஏப்ரல் 30, 2011வன்னியில் திங்களன்று 36 தமிழர்கள் படுகொலை; 76 பேருக்கு படுகாயம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009
வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் நேற்றும் சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர்.
சுதந்திரபுரம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கி.மனோன்மணி (வயது 60)
ந.ஜெயசாந்தி (வயது 38)
மு.அங்கமுத்து (வயது 58)
ஆகியோர் கொல்லப்படடவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு வயது குழந்தையான சுசீலா
யோ.கவிந்தவி (வயது 09)
யோ.விதுஸ்ணவி (வயது 13)
ந.டயோலா (வயது 15)
த.யோகா (வயது 19)
கி.இராசமணி (வயது 65)
இ.இராஜேஸ்வரி (வயது 39)
பொ.கிருஸ்ணமூர்த்தி (வயது 32)
மா.சாந்தகுமார் (வயது 25)
விஜயலட்சுமி (வயது 46)
க.மல்லிகாதேவி (வயது 48)
இராஜசிறீ (வயது 28)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தளன் பகுதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இத்தாக்குதலின் போது ஒரு கொட்டகைக்குள் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகள் செயலிழந்து விட்ட காரணத்தினால் மரங்களின் கீழும் தெருவோர காப்பகழிகளிலுமே காயமடைந்தோருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
நிவாதேயினி (வயது 10)
த.தமிழன்பன் (வயது 05)
த.செல்வானந்த் (வயது 12)
செ.தனஞ்சியன் (வயது 47)
த.நகுலேஸ்வரி (வயது 42)
செ.தயாபரன் (வயது 37)
த.சுமதி
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா வான்படை தாக்குதல்
இதேவேளை, சிறிலங்கா வன்படை நேற்று நடத்திய குண்டுத்தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கொட்டகைகளை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்தோரில்
சடையன் வரதராசா (வயது 23)
கணேசன் சுதாகரன் (வயது 25)
இராமன் இராசன் (வயது 32)
தயாபரன் பாலசுமதி (வயது 35)
சிவநேசன் (வயது 36)
ஆகியோரினது விபரங்கள் கிடைத்துள்ளன.
நல்லடக்கம்
இதேவேளை, சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 தமிழர்களின் உடலங்கள் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 12 உடலங்கள் உரிய உறவினர்கள் எவரும் இல்லாத நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)