மாத்தளனில் படையினரின் எறிகணை வீச்சில் ஐ.சி.ஆர்.சி. பணியாளர் பலி
 
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2009 ]
வன்னியில் நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் மாத்தளன் பகுதியை இலக்கு வைத்து மேற்கொண்ட ஆட்லறி தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பணியாளர் நேற்று படுகாயமடைந்த நோயாளிகளை மாத்தளன் மருத்துவமனையிலிருந்து ஐ.சி.ஆர்.சி. கப்பலுக்கு ஏற்றும்  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே எறிகணை தாக்குலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் யாழ். அளவெட்டியைச் சேர்ந்த கே. விஜயராசா என்பவராவார். இவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் 1997 ம் ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார். 2000 ஆண்டு தொடக்கம் குழு தலைவராக பதவியாற்றுகின்றார் என ஐ.சி.ஆர்.சி.யின் நடமாடும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விஜயராசா அவர்கள் ஏற்கனவே மல்லாவி பகுதியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நீர் வழங்கல், உடல் நல பாதுகாப்பு பிரிவின் பிரதி பொறுப்பாளராக கடமையாற்றியவர் என மேலும் தெரிவித்துள்ளனர். இப்படியாக இவரது சேவை பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online