10 மார்ச் 2009 7 மணித்தியாலங்களில் 129 பொதுமக்கள் படுகொலை! 200 பேர் படுகாயம்; கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டன
at வெள்ளி, ஏப்ரல் 29, 20117 மணித்தியாலங்களில் 129 பொதுமக்கள் படுகொலை! 200 பேர் படுகாயம்; கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டன
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009]
சிறீலங்கா படைகள் வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் நோக்கி இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 2:30 மணிமுதல் காலை 10:00 மணிவரை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 200இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் தங்கியிருந்த 300 வரையிலான தற்காலிக தரப்பாள் குடிசைகள் பல்குழல் எறிகணைகளில் சிக்கி சாம்பலாகி இருக்கின்றன.
மக்கள் நித்திரையில் இருந்த அதிகாலை வேளையிலேயே கொலைவெறிப் படையினர் தாக்குதலை ஆரம்பித்ததால், மக்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனால் மக்கள் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும், கூறுகின்றார்.
வலைஞர்மடத்திலுள்ள மருந்துக் களஞ்சியமும் தாக்குதலில் சேதமடைந்துள்ளதுடன், மருத்துவர் ஒருவரது மகனும் அந்த இடத்தில் கொல்லப்பட்டிருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடையும் மக்களுக்குரிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், மருந்துக் களஞ்சியமும் தாக்கப்பட்டுள்ளது.
வன்னி மக்களுக்கு எனக் கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொருள்களை இறக்க முடியாத அளவிற்கு காலநிலை காணப்பட்டதுடன், நேற்று சிறிய அளவிலான சூறாவளியும் ஏற்பட், அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள முன்னர் அதிகாலை வேளையில் பாதுகாப்பு வலயத்தில் நித்திரையில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களை படையினர் குறிவைத்துள்ளனர்.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஆட்டிலறி, மற்றும் பல்குழல் எறிகணைகளில் கொத்துக் குண்டுகளும் பொருத்தப்பட்டு வீசப்பட்டதால், தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிக்கும் சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து காணப்பட்டன.
அனைத்துலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை, அனைத்துலக கண்டனங்கள் மத்தியிலும் சிறீலங்கா அரசு தமிழ் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து வருகின்ற போதிலும், அனைத்துல நாடுகளோ, ஐக்கிய நாடுகள் சபையோ ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)