சிறிலங்கா கொடுங்கோல் அரசின் தமிழ் இனப் பலி தொடர்கிறது : வன்னியில் இன்றும் (செவ்வாய்) 48 தமிழர்கள் படுகொலை; 126 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009
வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று செவ்வாயக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகள் மீது இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டுத் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாலகுமார் விதுசா (வயது 14)
தயானந்தன் அம்பிகா (வயது 44)
சசிக்குமர் ஸ்பேயன் (வயது 60)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
விக்கினேஸ்வரன் கஜனி (வயது 07)
சசிக்குமார் தேனிலவன் (வயது 05)
பாலகுமார் விதுசா (வயது 16)
தயானந்தா அம்பிகாவதி (வயது 45)
தவம் பெனடிற் (வயது 61)
சின்னத்தம்பி (வயது 61)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் றோஜினி
த.சுபாசினி
தர்மலிங்கம் ஜெனி
தர்மலிங்கம் அஜந்தன்
சு.ஞானாம்பிகா
சோமசுந்தரம் விக்கினேஸ்வரராஜா
விக்கினேஸ்வரராஜா கரன்
அரவிந்தன்
கந்தையா முத்துக்குமார்
க.நந்தினி
சிவச்செல்வன்
த.வனஜா
த.அரவிந்தன்
த.கிநிசா
பாலராசா சந்திரகுமார்
சித்திரவேல்
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்தில் 28 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
வள்ளிபுனத்தில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online