28 பெப்ரவரி 2009 வன்னியில் தொடரும் அகோர எறிகணைத் தாக்குதல்: நேற்றிரவு 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை; 65 பேர் காயம்
at சனி, ஏப்ரல் 30, 2011வன்னியில் தொடரும் அகோர எறிகணைத் தாக்குதல்: நேற்றிரவு 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை; 65 பேர் காயம்
[ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009 ]
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மாலை 6:50 மணியளவிலும், இரவு 8:25 மணியளவிலும், இரவு 9:50 மணியளவிலும் தொடர்ச்சியாக எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர்.
இதில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)