முல்லைத்தீவில் காயமடைந்த மேலும் 493 பேர் இன்று புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் (திருத்தம்)
 
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009,  ]
முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து 13 வது தடவையாக இலங்கைப் படையினரின் தாக்குதலால் காயமடைந்தவர்களை ஏற்றிய சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் இன்று புல்மோட்டைக்கு வந்துள்ளது
 493 பேரை ஏற்றிய இந்தக் கப்பல் இன்று மாலையளவில் புல்மோட்டைக்கு இந்திய வைத்தியர்களின் சிகிச்சை முகாமுக்கு வந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே படையினரின் தாக்குலில் காயமடைந்த சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் புல்மோட்டைக்கும் திருகோணமலைக்கும் அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

காயமடைந்த முல்லைத்தீவு மக்கள் 13 தடவையாகவும் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

இவர்கள் புல்மோட்டையில் உள்ள இந்திய வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கும் ஏனைய வைத்தியசாலைக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்

இன்று அழைத்து வரப்பட்டவர்களில் பலர் கடும் காயங்களுக்கு உள்ளானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online