வன்னியில் நேற்றும் இன்று அதிகாலையும் படையினரின் எறிகணை தாக்குதலில் 25 சிறுவர்கள் உட்பட 74 தமிழர்கள் பலி 100க்கு மேல் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009 ]
வன்னியில் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய அதிகாலையும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 74 தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு வலயப் பகுதியில் மினி சூறாவளியுடன் கூடிய மழை பெய்து தார்ப்பாழ் குடிசைகளில் வாழ்ந்துவந்த மக்கள் பெரும் அவலத்திற்குள்ளாகிய நிலையில் அப்பகுதிகளை இலக்கு வைத்து காட்டுமிராண்டி படையினர் ஆட்லறி, கிளஸரர் ரக எறிகணைகள், எரி குண்டுகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் ஆகிய தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை தாக்குதல்களில் மொத்தமாக 18 சிறுவர்கள் அடங்கலாக 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்
அமபலவன்பொக்கணை பகுதியில் 4 சிறுவர் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
வலைஞர் மடத்தில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
மாத்தளன் பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 7  பேர் பலியாகியுள்ளனர்.
இரட்டைவாய்க்கால் பகுதியில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
முள்ளிவாயக்காலில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை இதே பகுதிகளில் இன்று செவ்வாய் அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொண்ட தாக்குதல்களில் 7 சிறுவர்கள் உட்பட 18 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online