வன்னியில் பாரிய மனித அழிவு ஒன்று குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. - வைத்தியர்
 
[ வெள்ளிக்கிழமை, 15 மே 2009, ]
 
மனிதாபிமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வன்னியில் பாரிய அழிவு ஒன்றை தடுக்கமுடியாது போய் விடும் என வைத்தியர் ஒருவர் இன்று மாலை தெரிவித்துள்ளார்.


மக்கள் எவ்வித வசதிகளும் இன்றி பதுங்குகுழிகளுக்குள் முடங்கிகிடக்கின்றனர். எவ்வித மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் காயமடைந்த பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைப்படையினர் கனரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளன

குறித்த வைத்தியரின் தகவலின்படி பொதுமக்களின் சுமார் 800 சடலங்கள் பிரதேசத்தில் கிடக்கின்றன. பலர் காயமடைந்து உதவியின்றி உள்ளனர்

இதேவேளை எறிகனை வீச்சுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதால் தம்மால் மக்கள் வெளியேற்றவோ அல்லது உணவு விநியோகத்தை மேற்கொள்ளவோ முடியாதிருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அந்த பணிகளை தாம் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online