08 மார்ச் 2009 வன்னியில் குழந்தைகளுக்கான பால்மா 1500 ரூபா, ஒருகட்டு கீரை 200 ரூபா வரை விற்பனை: சிறுவர்கள் போசனை குறைபாட்டினால் பாதிப்பு
at சனி, ஏப்ரல் 30, 2011வன்னியில் குழந்தைகளுக்கான பால்மா 1500 ரூபா, ஒருகட்டு கீரை 200 ரூபா வரை விற்பனை: சிறுவர்கள் போசனை குறைபாட்டினால் பாதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2009 ]
முல்லைத்தீவில் குழந்தைகளுக்கான பால்மா மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் உள்ள சொற்ப பொருட்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வகையில் எஸ்.எம்.ஏ. பால்மா 1000 ரூபா முதல் 1500 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மீன் ஒரு கிலோ 1000 ரூபா முதல் 1500 ரூபா வரையும்,
செத்தல் மிளகாய் 4000 ரூபா வரையும்,
முட்டை 50 ரூபா,
தேசிக்காய் ஒன்று 150 ரூபா,
ஏனைய பால்மா 1000 ரூபா,
தேங்காய் ஒன்று 140 ரூபா முதல் 150 ரூபா வரையும்,
அரிசி கிலோ 180 ரூபா முதல் 200 ரூபா வரையும்,
மரக்கறி 1000 ரூபா முதல் 1500 ரூபா வரையும்,
கீரை ஒரு கட்டு 100 ரூபா முதல் 200 ரூபா வரையும்,
கோதுமை மா ஒரு கிலோ வரையும் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் சிறுவர்கள் மத்தியில் போசனை குறைபாடுகள்
முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் மரக்கறி உணவுகள் கிடைக்காமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் போசனை குறைபாடுகள் தீவிரமாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய வைத்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக 50 வீதமான சிறுவர்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை வரலாற்றில் காணாத அளவில் வயிற்றோட்ட நோய் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் முல்லைத்தீவில் சுகாதாரம் மற்றும் உணவு வழங்கலில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்றும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)