பொன்னம்பலம் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 61 நோயாளர் பலி; 12 பேர் படுகாயம்
 
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2009
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது நடைபெற்ற வான் தாக்குதலின் தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளை சரிவரச் செய்ய முடியாது இருக்கின்றது.

ஆரம்பகட்ட தகவலின்படி 40 நோயாளர் கொண்ட விடுதியில் இருந்த நோயாளர்களும் ஏனையோருமாக 61 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

இவ் வைத்தியசாலை 1996 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயங்கி வருவதாகவும் அரசசார்பற்ற நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online