சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் கடந்த 3 தினங்களில் 179 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் பலி
 
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009,  ]

சிறிலங்கா படையினரின் தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 179 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் குறைந்தது 76 பேர், 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். அத்துடன் 16 கர்ப்பிணி தாய்மார்களும் கொல்லப்பட்டனர்.109க்கும் அதிகமான, 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான எறிகணை வீச்சுக்களில், 45 சதவீதமானவை பாதுகாப்பு வலயங்களிலேயே வீழ்ந்துள்ளன.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, காயமடைந்தவர்களை அழைத்துச் செல்லவந்த வெளிநாட்டு அதிகாரிகள் சிலர், அவர்கள் வந்த செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீதான இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்த தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலின் பலகணி ஒன்று சேதமடைந்துள்ளது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர், இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் காயமடைந்துள்ளார்.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவரின் மனைவியும் எறிகணை வீச்சினால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online