வன்னியில் சிறிலங்காப் படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதலில் இன்று 84 பொதுமக்கள் பலி 182 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2009, ]
பாதுகாப்பு வலய பிரதேசம் மீது சிறிலங்கா படையினர் இன்று செவ்வாய்க்கிழமை நடாத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 84 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 182 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலய்ப் பிரதேசங்களான பச்சைப்புல்மோட்டை வலைஞ்ர்மடம் பகுதிகள் மீது சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டுத்தாக்குதலில் 52  பொதுமக்கள் கொல்லப்பட்ட்டதோடு 182 பேர் காயமடைந்துள்ளனர்,

அதேபகுதிகள் மீது, இன்று காலை படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் 32 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இன்று மாலை புலிகளில் குரல் வானொலி இத்தகவலை ஒலிபரப்பு செய்தது.
இப்பகுதிகள் மீது வான்படையினர் 12 தடவைகள் தாக்குதலை நடாத்தியதாகவும் ஒவ்வொரு தடவையும் 1000 கிலோ எடையினைக் கொண்ட குண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலால் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் அச்சமும் பதற்றமும் நிலவுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online