15 மார்ச் 2009 தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையைத் தாக்கிய படையினர் எறிகணை நெஞ்சை உலுக்கும் சம்பவம்
at வெள்ளி, ஏப்ரல் 29, 2011தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையைத் தாக்கிய படையினர் எறிகணை நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2009 ]
சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படையினரின் எறிகணையில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த 2ம் திகதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தையில் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்த எறிகணைத் துண்டு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
தேராவில் விசுவமடு பகுதியில் வசித்துவந்த 24 வயதான பிரசாத் சிவதர்சினி என்பவரே படுகாயமடைந்த நிலையில் குழந்தையைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)