19 மார்ச் 2009 வன்னியில் எறிகணை, வான் தாக்குதலில் நேற்று 67 பொதுமக்கள் பலி, 97 பேர் காயம்
at வெள்ளி, ஏப்ரல் 29, 2011வன்னியில் எறிகணை, வான் தாக்குதலில் நேற்று 67 பொதுமக்கள் பலி, 97 பேர் காயம்
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2009 ]
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் , எறிகணைத் தாக்குதல்களில் நேற்று 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் செஞ்சிலுவைப் பணியாளர் ஒருவரும் அடங்குகிறார்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் , பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
த.சத்தியரூபி ((வயது 36)
ந.ராசம்மா (வயது 70)
செ.டானியன் (வயது 62)
க.சிவக்கொழுந்து (வயது 60)
அ.சுரேந்தினி (வயது 28)
அ.சுஜாதா (வயது 03)
ச.தங்கராசா (வயது 45)
சி.நிரோசா (வயது 10)
செ.நிரோஜன் (வயது 09)
ச.சத்தியரூபி (வயது 26)
இ.சபேசன் (வயது 24)
த.தியாகராசா (வயது 65)
யோ.ரெதீபன் (வயது 09)
யோ.அந்தோனிப்பிள்ளை (வயது 59)
க.கலைவாணன் (மாதம் 08)
ரூ.சர்மிலா (வயது 30)
ஜெ.சசிகலா (வயது 32)
ந.திருபாலசிங்கம் (வயது 55)
ந.ராசமணி (வயது 70)
சி.நிரேயினி (வயது 10)
ச.தர்சினி (வயது 26)
த.தியாகராசா (வயது 60)
து.துவாரகா (வயது 03)
த.தர்மிகா (வயது 05)
வே.சர்மியா (வயது 10)
ச.கண்மணி (வயது 48)
க.பத்மசீலா (வயது 58)
நீ.வேணி (வயது 44)
சி.கோபிகன் (வயது 16)
சி.கலாதேவி (வயது 39)
ச.ஜெனோபா (வயது 30)
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 30 தமிழர்கள் பலியானதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளையில் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் மகேந்திரராசா ராம்குமார் (வயது 27) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
அண்மைக்காலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் மீதும் சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)