வன்னியில் இலங்கை இராணுவத்தால் கடந்த 48 மணித்தியாலத்தில் 128 பொதுமக்கள் கொன்று குவிப்பு
 
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009, ]
இலங்கை இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்கள்  ஆர்பிஜி மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களினால் 19 சிறுவர்கள் உள்ளிட்ட 96 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஏற்கனவே ஞாயிற்றுகிழமை 7 சிறுவர்கள் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டனர். உள்ளுர் தொண்டு பணியாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின்
தகவல்களின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 160 பொது மக்கள், புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் மோட்டார்
தாக்குதல் முன்னெடுப்பினால் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு வலயத்தினுள் அதிகரித்த அளவில் இராணுவத்தினரால் பொதுமக்கள் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் புதுமாத்தளன் வைத்திய சாலைக்கு அருகில் 9 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 400 மீற்றருக்கு அப்பால் இருந்து இந்த வைத்தியசாலைக்கு இராணுவத்தினர் எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். பொக்கணை பிரதேசத்தில் வீழ்ந்த 3 எறிகணைகளில் 16 பொதுக்கள் கொல்லப்பட்டனர்.
மாத்தளன் பிரதேத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online