வன்னியில் கடந்த 48 மணி நேரத்தில் வான், எறிகணை தாக்குதல்களில் 180 பொதுமக்கள் வரை பலியாகினர்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009
இலங்கை இராணுவத்தினரால் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 48 மணித்தியாலங்களுக்குள் சுதந்திரபுரம், இருட்டுமடு, உடையார்கட்டு மற்றும் தேவிபுரம் ஆகிய பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் படையினர் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களில் மாத்திரம் 120 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாத்திரம் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன்  நேற்று சனிக்கிழமை மாத்திரம் 62க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்
இதேவேளை வெள்ளிக்கிழமை இலங்கை விமானப்படை புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டு தாக்குதல்களில் 61 நோயாளர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்களின் சேத விபரங்கள் தெரியவரவில்லை.
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தனுக்கு பொதுமக்கள் நடமாடும் பாதைகளில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான செல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் உயிரிழந்த 8 உடலங்கள் சனிக்கிழமை காலை வீதியோரங்களில் காணக்கூடியதாக இருந்தது. இதில் பேரூந்து ஒன்று கைவிடப்பட்ட நிலையில் எறிகணை வீச்சில் சேதமடைந்தது.  2  உழவூர்திகள்  தீக்கிரையாகின.
புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு வீதியான வாகீசன் வீதியிலும் 4 உடலங்கள் மீட்கப்பட்டன.
இதேவேளை பாதுகாப்பு வலயத்தில் உள்ள தேவிபுரம் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.45க்கு பின்னர்  மேற்கொள்ளப்பட்ட, கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் 9 பேர்  பலியாகினர்.
 அத்துடன் சுதந்திரபுரம் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்களில் அந்த வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் பலியானார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online