வன்னியில் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்றும் எறிகணைத் தாக்குதல்: 17 தமிழர்கள் பலி; 43 பேர் காயம்
 
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2009
வன்னிப்பெரு நிலப்பரப்பில் பொதுமக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
'மக்கள் பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு இடங்களிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 35 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வினோஜன் (வயது 09)
இ.இசைக்கீதன் (வயது 19)
வி.நளாஜினி (வயது 36)
ந.சிவகுமார் (வயது 30)
க.விமல் (வயது 30)  ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட வலைஞர்மடத்தில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.
பி.விநாயகன் (வயது 21) மற்றும் வீ.விஜேந்திரன் (வயது 29) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு  உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சுமதா (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online