உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009
தற்காலிகமாக இயங்கும் உடையார்கட்டு மருத்துவமனை (கிளிநொச்சி மருத்துவமனை) மீது நேற்று திங்கட்கிழமை  படையினர் செலுத்திய 3 எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததினால் மருத்துவமனை தாதி ஒருவர் பலியானார். மேலும் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
எதுவித உதவிகளுமின்றி  அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் புதுக்குடியிருப்பு ,  உடையார்கட்டு ஆகிய இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணைத் தாக்குதல் அடுத்தடுத்து நடத்தியுள்ளனர்.
உடையார்கட்டு வைத்தியசாலை மீது நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரான தவராசா கஜேந்தினி அந்த இடத்தில் துடிதுடித்து மரணமானார். மற்றும் இருவர் ஆஸ்பத்திரிக்குள் பலியாகினர்.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் மூன்று ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இரண்டாவது ஷெல் வெடித்ததில் தாதிய உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். அங்கு நோயாளர்களுக்கு அவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்  காரணமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online