முல்லைத்தீவில் கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 208 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2009 ]
முல்லைத்தீவில் கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 208 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வலயப்பகுதியின் மீது இலங்கைப்படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
இன்று சனிக்கிழமையன்று பிற்பகல் 3 மணிவரையான காலப்பகுதியில் 53 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 112 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமையன்று 86 பொதுமக்கள் பலியானதுடன் 100 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்தும் எறிகனை வீச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படவில்லை என வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமையன்று 69 பொதுமக்கள் பதுங்குக்குழிகளுக்குள்ளேயே கொல்லப்பட்டனர். அம்பலவன்பொக்கனை மாத்தளன் போன்ற பகுதிகளில் இன்று சனிக்கிழமையன்று வீழ்ந்து வெடித்த எறிகனைகள் காரணமாக பலர் பதுங்குக்குழிகளிலேயே கொல்லப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால்இரட்டை வாய்க்கால் மற்றும் இரணைப்பாலை ஆகிய இடங்களிலும் எறிகனைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இன்று மாத்ளதனுக்கும் அம்பலவன்பொக்கணைக்கும் இடையிலான வைத்தியசாலைக்கு 500 மீற்றர் தூரத்தில் மனிதாபிமான நிவாரணங்களுக்காக கிராமசேவகரிடம் நின்றிருந்த இருவர் எறிகணை தாக்குதலால் கொல்லப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமையன்று ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை விமானப்படையின் தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இதன்போது இரண்டு விமானங்கள் சுமார் 8 தடவைகளாக குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளன. இங்கு கொல்லப்பட்டவர்களில் ஈழநாதம் பத்திரிகையின் விநியோக முகாமையாளரான சசி மதனும் அடங்குகிறார்.

அத்துடன் பொக்கணையில் கடந்த வியாழக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட எறிகுண்டு தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

முள்ளியவலையில் 30 பேர் கடந்த வியாழக்கிழமையன்று கொல்லப்பட்டனர். இதேவேளை சாலை கடற்பகுதியில் படையினரின் தூர இலக்கு இயந்திர துப்பாக்கியின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு துப்பாக்கி சன்னமானது ஐ சி ஆர் சி கப்பல் மீது தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தாக்குதல்களில் நேற்றைய தினம் சனிக்கிழமை கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களில் கிடைக்கப்பெற்ற பெயர் விபரங்கள் வருமாறு:-
சு.கிரிசாந்தன் (வயது 12)
சு.சுபிசன் (வயது 05)
சு.சுவீதா (வயது 03)
ஜெ. ஜெனிஸ்ரா (வயது 07)
செ. ஜெயரூபன் (வயது 19)
ச. சண்முகம் (வயது 50)
ஜெ. ஜென்சிகா (வயது 06)
சிதம்பரநாதன் (வயது 56)
சரணியா (வயது 03)
மிக்கேல்பிள்ளை ஞானேஸ்வரன் (வயது 60)
ஞானேஸ்வரன் கமில்டன் (வயது 20)
திருமூர்த்தி பிரதீபன் (வயது 16)
நாகமுத்து அருள்நேசயோகநாதன் (வயது 65)
ச.விஜரஞ்சிததாஸ் (வயது 26)
அந்தோனி ரேணுகா (வயது 17)   ஆகியோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
பொன்னையா பத்மாவதி (வயது 54)
செல்வம் சிவசோதி  (வயது 34)
ஆறுமுகம் சுரேஸ் (வயது 39)
சுரேஸ் தியாகசோதி (வயது 32)
சுரேஸ் கஜிதரன் (வயது 18)
சுரேஸ் கிருசாந்தன் (வயது 12)
சுரேஸ் சுபீசன (வயது 05)
சுரேஸ் சுபிக்கா (வயது 03)
கண்ணையா றோஸ்மலர் (வயது 36)
கண்ணையா அன்பரசி (வயது 10)
ஆரோக்கியம் சபரியான் (வயது 70)
வேலாயுதம் கிருஸ்ணகுமார் (வயது 31)
கந்தசாமி ரமேஸ் (வயது 22)
செ. ஜெயரூபன்
இராமையா சண்முகம் (வயது 50)
வீரப்பன் நிசாந்தி (வயது 10)
நாகமுத்து கங்காதரன் (வயது 48)
சிவராஜா கலாதீபன் (வயது 13)
கருணாகரசிங்கம் புஸ்பராணி (வயது 27)
ஜெகதீஸ்வரன் ஜென்சிகா (வயது 07)
தங்கவேல் (வயது 70)
கதிராசி (வயது 72)    ஆகியோரின் உடலங்களே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதில் 12 வயது சிறுமியின் உடலம் இதுவரை உறவினா்களால் அடையாளம் காணப்படவில்லை.
மை.திரேசா (வயது 57)
விஸ்வமலர் (வயது 27)
பரமேஸ்வரன் (வயது 30)
தனுசன் (வயது 07)
டயானா (வயது 02)
சாரதாதேவி (வயது 36)
புவனாதேவி (வயது 26)
சின்னக்குமார் (வயது 31)
சி.பரமேஸ்வரன் (வயது 28)
மோ.திவ்யா (வயது 15)
மு.இராஜகுலேந்திரன் (வயது 25)
சி.ஆதீபன் (வயது 06)
அன்ரனியேசுதாஸ் (வயது 30)
செ.இன்பராணி (வயது 36)
த.நிக்சன் (வயது 33)
வே.நிசாந்தினி (வயது 10)
மு.சுஜித்திரா (வயது 26)
ஆ.பரமாயி (வயது 62)
இ.றஜீபன் (வயது 12)
இ.கலையரசன் (வயது 07)
செ.கோகுலன் (வயது 12)
கு.தாசகுமார் (வயது 15)
ச.குணராசா (வயது 52)
ச.கதிராசி (வயது 73)
ம.மதுசன் (வயது 13)
த.தர்மேநதிரன் (வயது 25)
சி.சசிக்குமார் (வயது 33)
ச.சுபாசினி (வயது 32)
பிரியங்கன் (வயது 10)
ச.பிரியங்கா (வயது 06)
சி.பானுவன் (வயது 07)
கெ.மஞ்சுளா (வயது 30)
செ. ஜெகதீஸ்வரி (வயது 39)
கரிசாலன் வயது (02 வருடங்கள் 05 மாதங்கள்)
க.துரைராசா (வயது 61)
ர.சறோஜினிதேவி (வயது 36)
ர.பிரியங்கன் (வயது 10)
பா.தனுசன் (வயது 14)
சு.தங்கம்மா (வயது 67)
ம.திலகம்மா (வயது 65)
ம.சந்திரமோகன் (வயது 46)
பொ.மீனாட்சி (வயது 56)
ச.நகுலேஸ்வரன் (வயது 49)
ந.பரமேஸ்வரி (வயது 55)
ப.கமலாதேவி (வயது 58)
சி.ராஜன் (வயது 31)
க.சுகன்ஜா (வயது 14)
பு.கிருஸ்ணகுமாரி (வயது 33)
எழில்மதி வயது (06 மாதங்கள்)
செ.சிவயோகம் (வயது 60)
த.ஜெயதேவி (வயது 28)
ந.சரஸ்வதி (வயது 58)
க.மீனாட்சிப்பிள்ளை (வயது 88)
த.பத்மாவதி (வயது 47)
செ.தியாகராசா (வயது 72)
சி.செல்வராணி (வயது 53)
ந.புஸ்பராணி (வயது 39)
செ.சரண்ஜா (வயது 14)
செ.சிதம்பரநாதன் (வயது 58)
சி.சிவரூபன் (வயது 29)
அ. சாந்தாஜினி (வயது 48)
சு. மகேஸ்வரன் (வயது 42)
ஜெ.ஜெனிஸ்ரா (வயது 03)
சந்திராதேவி (வயது 51)
ச.சஞ்சீவன் (வயது 12)
ச.ஜெயதீபன் (வயது 10)
த.மோகன் (வயது 14)
இ.நிதர்சன் (வயது 10)
த.ராஜா (வயது 28)
ந.செல்வராணி (வயது 59)
கி.பிரதீபன் (வயது 16)
சு.லோறன்ஸ் (வயது 16)
ப.பிறேமலா (வயது 28)
சி.விஜயன் (வயது 23)
க.பஞ்சாட்சரம் (வயது 46)
ஜெயசீலன் (வயது 32)
சீதாலட்சுமி (வயது 44)
சி.செபஸ்ரியான் (வயது 29)
கி.நிருஜன் (வயது 10)
சி.ஜெயலட்சுமி (வயது 44)
ம.பொன்னாபூசனம் (வயது 69)
சி.நல்லையா (வயது 66)
சி.கலிஸ்ரன் (வயது 13)
மிறோஸ்சன் (வயது 16)
ம.மதியாபரணம் (வயது 58)
ச.ராதிகா (வயது 16)
வி.திருமலை (வயது 28)
அ.சிவகுமார் (வயது 34)
ப.பகீர்தன் (வயது 12)
ந.பவித்தாராணி (வயது 10)
சி.முகுந்தன் (வயது 30)
செ.முகுந்தன் (வயது 24)
கா.ரங்கநாதன் (வயது 48)
ந.மோகதாஸ் (வயது 23)
சோ.கோதரசன் (வயது 40)
சி.மாலினி (வயது 36)
தே.குலேந்திரன் (வயது 28)
ம.மயூரன் (வயது 12)
ச.சந்திரகுமார் (வயது 30)
ஜெ.சங்கவி (வயது 04)
க.சாதுசன் (வயது 14)
ஜெ.தயாபரன் (வயது 30)
த.சுசி (வயது 27)
ஆ.நகுலேஸ்வரன் (வயது 25)
கோ.ஜீவநேசராணி (வயது 29)
கு.மதிவதனன் (வயது 07)
கணேசமூர்த்தி (வயது 57)
பெ.சிங்கன் (வயது 37)
பே.நிசாந்தினி (வயது 13)
கு.மேரிஸ்நாயகி (வயது 45)
சா.வசந்தன் (வயது 26)
கா.தேவர் (வயது 68)
சி.விஜயகுமார் (வயது 33)
ப.மங்களசொந்தரி (வயது 27)
சு.ஜெயரட்ணம் (வயது 46)
ம.சபாரட்ணம் (வயது 40)
சு.பிரியதர்சினி (வயது 23)
பெ.சூரியகுமார் (வயது 31)  ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online