வன்னியில் படையினரின் இனஅழிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேசம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தமிழர் புனர்வாழ்வு கழகம் 11-MAY-2009
at திங்கள், ஏப்ரல் 25, 2011வன்னியில் படையினரின் இனஅழிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேசம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தமிழர் புனர்வாழ்வு கழகம்
[ திங்கட்கிழமை, 11 மே 2009, ]
ஸ்ரீலங்கா இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் பாரிய எறிகனை வீச்சுக்களையும் அளவில்லாத கனரக ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என த.பு.கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள 130 000 மக்கள் போதுமான பதுங்குகுழிகளோ அல்லது, கூடாரங்களோ அற்ற நிலையில் துன்பமுறுகின்றனர்.வெறும் 7 சதுர கிலோமீற்றர் பரப்பில் உள்ள இந்த மக்கள், போதுமான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை முதல் இன்று காலை வரை மாத்திரம் 3,200 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளதாகவும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் லோரன்ஸ் கிரிஸ்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் இந்த மக்களை சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேசம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம், எறிகனை, பீரங்கிகள், 50 கலிபர் இயந்திர துப்பாக்கி, மோட்டார் பல்குழல் ஏவுகணைகள் என்பவற்றை கொண்டு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பகுதியில் உள்ள தற்காலிக வைத்தியசாலையின் 50 சதவீதமானவர்கள், காயமடைந்துள்ளனர், சேவையாளர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் தமது கடமைகளுக்கு வருகை தரவில்லை.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதிகாரம் படைத்த இந்திய அமெரிக்கா போன்ற நாடுகள் மௌனம் சாதித்து வந்த கடந்த 5 மாதங்களில் மாத்திரம், 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டும் 20,000க்கும் அதிகமான பொது மக்கள் காயமடைந்தும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)