யுத்த சூன்ய வலயத்தில் அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது: ஐக்கிய நாடுகள் சபை 17-APR-2009
at சனி, ஏப்ரல் 23, 2011யுத்த சூன்ய வலயத்தில் அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது: ஐக்கிய நாடுகள் சபை
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, ]
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்தக் கால நிறைவையடுத்து, அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயத்தில் பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பதிவாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக இராணுவத்தினரின் உலங்குவானூர்திகள் பாதுகாப்பு வலயங்களுக்கூடாக பயணித்து குண்டுகளை வீசியுள்ளதாகவும், அதிக அளவிலான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை செய்தி வெளியிட்டுள்ளது.
சாதாரண நாட்களை விட யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு நாட்களில், அந்த பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பு பிரதேசத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தமையையும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை பொது மக்கள் தடுத்து வைக்கப்படாமல், அவர்களின் விருப்பத்திற்கிணங்க செல்வதற்கு அவர்களின் நடமாட்ட சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.