தடைசெய்யப்பட்ட மூன்று வகைக் குண்டுகளால் தமிழர்கள் மீது தாக்குதல் : விடுதலைப் புலிகள் கண்டனம்

[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, ]

இராணுவப் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதாக திட்டமிட்ட ரீதியில் இந்திய ஊடகங்கள் சிலவும் சிறிலங்கா ஊடகங்களும் வெளியிட்டு வரும் பரப்புரையை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளதுடன், கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
தமிழ் மக்கள் மிக மோசமான இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறான செய்திகளை புனைந்து வெளியிடுவதாக தமிழ்நெட் இணையத்தளத்திற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது இன்று சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட கொத்தணிக் (கிளஸ்ரர்) குண்டுகளையும், நேபாம் குண்டுகளையும், பொஸ்பரஸ் எரி குண்டுகளையும் வீசி படையினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள அவர், இன்று ஆயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்டு, 1200 பேர் வரை படுயாகயங்களுடன் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online