நேற்று (ஞாயிறு) இரவு தொடக்கம் இன்று (திங்கள்) காலை வரை படையினரின் தாக்குதல்களில் 34 பொதுமக்கள் பலி; 46 பேர் காயம்
 
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009,
 
 
வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களை அவலப்படுத்த சிறிலங்கா படையினர் இரவு இரவாக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று ஞாயிறு இரவு தொடக்கம் இன்று திங்கள் காலை வரை 34 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய தொடர் ஆட்லறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் பீரங்கி, மோட்டார், கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் குறிசூட்டு தாக்குதல்கள் இன்று காலை வரை சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் மேற்படி தாக்குதல்களை அகோரமாக நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல்களால் மக்கள் தொடர்ந்து இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். நேற்று ஞாயிறு இரவு தொடக்கம் இன்று திங்கள் காலை வரை 34 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் நெடுங்கேணி, பழம்பாசியைச் சேர்ந்த கிராம சேவையாளரான நல்லைநாதன் ரேணுகாந்தன் என்பவரும் அடங்குகின்றார் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online