வன்னியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் மார்ச் மாதத்தில் 12 கர்ப்பிணித் தாய்மார் படுகொலை


[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2009,]


முல்லைத்தீவில் சிறிலங்கா அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 இளம் கர்ப்பிணித் தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் பிரதி ஒன்று வவுனியா மாவட்ட செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களில் படுகாயமடைந்து உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களின் பெயர் விபரங்கள் வருமாறு:-

1. கமலநாதன் லிங்கேஸ்வரி வயது 22 இறந்த திகதி 28-02-2009 காலம் 5 மாதங்கள்

2. ஜெகதீஸ்வரன் விஜயகுமாரி வயது 38 இறந்த திகதி 09-03-2009 காலம் 3 மாதங்கள்

3. பாலசுப்ரமணியம் பரமேஸ்வரி வயது 30 இறந்த திகதி 11-03-2009 காலம் 3 மாதங்கள்

4. ஸ்ரீதரன் மனோரஞ்சிதம் வயது 28 இறந்த திகதி 11-03-2009 காலம் 5 மாதங்கள்

5. சண்முகராஜா தயாளினி வயது 26 இறந்த திகதி 25-03-2009 காலம் 4 மாதங்கள்

6. தங்கராசா யோகேஸ்வரி வயது 39 இறந்த திகதி 26-03-2009 காலம் 6 மாதங்கள்

7. சந்திரகுமார் கலைச்செல்வி வயது 20 இறந்த திகதி 27-03-2009 காலம் 7 மாதங்கள்

8. இராசதுரை ரஞ்சினி வயது 23 இறந்த திகதி 27-03-2009 காலம் 3 மாதங்கள்

9. கமலநாதன் உதயராணி வயது 35 இறந்த திகதி 28-03-2009 காலம் 2 மாதங்கள்

10. வசந்தகுமார் நந்தினி வயது 33 இறந்த திகதி 28-03-2009 காலம் 2 மாதங்கள்

11. துஷியந்தன் அருள்மலர் வயது 28 இறந்த திகதி 28-03-2009 காலம் 5 மாதங்கள்

12. தர்மலிங்கம் குமுதினி வயது 27 இறந்த திகதி 28-03-2009 காலம் 8 மாதங்கள்

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online