வன்னியில் சிறிலங்கா படையினர் தாக்குதல்: இன்று (வெள்ளி) 28 பொதுமக்கள் படுகொலை; 41 பேர் காயம்


[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2009,]


வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, தொலைதூர துப்பாக்கிச் சூடு மற்றும் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 28 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் இன்று சிறிலங்கா படையினர் எறிகணை, தொலைதூர துப்பாக்கிச் சூடு மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 28 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரம்:-

பாஸ்கரன் விஜயகுமாரி (வயது 36)

சிறீவேல்முருகன் நாகேஸ்வரன் (வயது 28)

மனோகரன் இந்துமதி (வயது 27)

முருகையா நகுலேஸ்வரி (வயது 22)

ஐயம்பிள்ளை கோபாலசிங்கம் (வயது 55)

சுப்பையா மயில்வாகனம் (வயது 67)

வீரசிங்கம் விசிதா (வயது 10)

தியாகு (வயது 40)

விஜயரத்தினம் கிருஸ்ணவேணி (வயது 55)

கந்தையாவேலும்மயிலும் (வயது 45)

செல்லையா சின்னையா (வயது 58)

நாகலிங்கம் நவரட்ணலிங்கம் (வயது 32)

பாலு இரத்தினசிங்கம் (வயது 61)

சுந்தரம் குகநிசா (வயது 05)

திலகராஜா சசிகரன் (வயது 23)

சின்னத்துரை ரவீந்திரன் (வயது 41)

அப்பன் (வயது 30)

மா.சந்திராதேவி (வயது 14)

சந்திரகுமார் வதனி (வயது 15)

சந்திரகுமார் சந்தியா (வயது 13)

மயூரதன் கம்சனா (வயது 12)

அருட்செல்வம் சசீலன் (வயது 25)

கந்தையா ராசன் (வயது 77)

தம்பிப்பிள்ளை தவராசா (வயது 32)

சந்தியாப்பிள்ளை கேசவன் (வயது 44)

சாந்தலிங்கம் காந்தமலர் (வயது 16)

யோகேஸ்வரன் சாதனா (வயது 45) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online