வன்னியில் படையினர் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: இன்றும்(சனி) 32 பொதுமக்கள் படுகொலை; 75 போ் காயம்

[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009,]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கொல்லப்பட்டவர்களை புதைக்க முடியாமலும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர், விபரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online