புதுமாத்தளனிலிருந்து 536 பேர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் 08-APR-2009
at வியாழன், ஏப்ரல் 21, 2011புதுமாத்தளனிலிருந்து 536 பேர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் 536 பேர் இன்று புதன்கிழமை புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் 230 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்டோரில் மூன்று பேர் இடை நடுவில் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுக்கு இலக்கானோர் நோயாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உதவியாளாகள் போன்றோரும் இந்தக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் 19 தடவை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளுக்கு நோயாளிகள் உள்ளிட்ட வன்னி பொதுமக்களை அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.