06-MAY-2009 இதுவரை வன்னியில் 6500 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம்; தற்போது பாரிய உணவு தட்டுப்பாடு: தமிழர் புனர்வாழ்வு கழகம் தெரிவிப்பு 06-MAY-2009
at திங்கள், ஏப்ரல் 25, 2011இதுவரை வன்னியில் 6500 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம்; தற்போது பாரிய உணவு தட்டுப்பாடு: தமிழர் புனர்வாழ்வு கழகம் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 06 மே 2009, ]
வன்னிப் பகுதியில் இதுவரை, தமது கணக்கீட்டின் படி 6500 சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது தகனம் செய்யப்பட்டதாகவும், அத்துடன் தற்போது வன்னியில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் லோறன்ஸ் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.
வன்னியில் சுமார் 1 இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு 2,500 மெட்றிக் தொன் உணவு மாதாந்தம் தேவைப்படுகிறதாகவும், எனினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 மெட்றிக் தொன் உணவுப்பொருட்கள் மாத்திரமே வன்னிக்கு எடுத்துவரப்பட்டதாகவும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுமார் ஆயிரத்து நூறு மெட்றிக் தொன் உணவுப்பொருட்கள் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை.
கடந்த 2 ம் திகதி தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் வெளியிடப்பட்ட கள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் 17 நிலையங்களில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
பசியால் வாடும் மக்களுக்கு முற்பகல் 10 மணிமுதல் மாலை 4 மணிவரை கஞ்சியை வழங்கி வருகின்றது. இந்த கஞ்சியில் நீர், அரிசி, உப்பு மற்றும் பால் என்பன அடங்கியுள்ளன.
அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்கின்ற பாரிய பணியையும் தமிழ் புனர்வாழ்வு கழக தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சடலங்கள் கூடாரங்களிலும் பதுங்கு குழிகளிலும் இருந்து சேகரிக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படுகின்றன.
வைத்தியசாலைகளில், காயங்களால் உயிரிழப்போரின் சடலங்களும் தொண்டர்களால் அடக்கம் செய்யப்படுகின்றன.
இதுவரை, தமது கணக்கீட்டின் படி 6500 சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது தகனம் செய்யப்பட்டதாக லோறன்ஸ் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)