செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் எறிகணை தாக்குதலில் பலி. 09-APR-2009
at வியாழன், ஏப்ரல் 21, 2011செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் எறிகணை தாக்குதலில் பலி.
[ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2009, ]
படையினரின் எறிகணை வீச்சுத்தாக்குதலில், மோதல் பிரதேசத்தில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் கடந்த 2002ம் ஆண்டுமுதல் நீர் விநியோக தொழில்நுட்பவியலாளராக செயற்பட்ட, சின்னத்துரை குகதாசன் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு பிரதிநிதி போல் கஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
இவர் அம்பலவான் பொக்கணை பிரதேசத்தில் வைத்து நீர் இறைத்துக் கொண்டிருந்த வேளையில், வீழ்ந்த எறிகணை வீச்சினால் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வன்னியில் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டாவது சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.