முள்ளிவாய்க்கால் பகுதி மீது படையினர் எறிகணைத் தாக்குதல்: 36 பொதுமக்கள் பலி; 43 பேர் படுகாயம் 16-APR-2009
at சனி, ஏப்ரல் 23, 2011முள்ளிவாய்க்கால் பகுதி மீது படையினர் எறிகணைத் தாக்குதல்: 36 பொதுமக்கள் பலி; 43 பேர் படுகாயம்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய இனஅழிப்புத் தாக்குதல்களில் 36 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது இன்று வியாழக்கிழமை காலை 8:50 மணியளவில் சிறிலங்கா படையினரால் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களில் 36 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் மக்கள் தற்காலிகமாக வாழ்ந்து வந்த 7 கூடாரங்கள் முற்றாக அழிந்து நாசமாகின.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை, நட்டாங்கண்டல் மருத்துவமனைகளின் தற்காலிகமாக இயங்கும் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் காயமடைந்தவர்களுக்கு 'திலீபன்' மருத்துவ சேவைப் பிரிவினரும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
மாத்தளன் மருத்துவமனைக்குச் செல்லும் வீதி படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதானால் காயமடைந்தவர்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.